இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில், 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 15 ஆம் தேதி கைது செய்ததையடுத்து, ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கினார்.
Discussion about this post