திருவண்ணாமலை மாவட்டத்தில் அரைக்கீரை பயிரிடுவதில் சிறு, குறு விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தண்டராம்பட்டு, கொளப்பாபட்டு, தேவனுர் கிராமங்களில் அரைக்கீரை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. இந்த பயிருக்கு உரம் தேவையில்லை. தண்ணீரும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. மிகக் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 60 நாட்களில் அறுவடை செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர்கள், ஐந்தாயிரம் ரூபாய் செலவழித்தால், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று கூறினார். ரத்தசோகையை போக்குதல், உடல் வலிமையை அதிகரித்தல் உள்பட பல மருத்துவ குணங்கள் அரைக்கீரைக்கு இருக்கிறது.
Discussion about this post