லயோலா பொறியியல் கல்லுரியின் 9-வது ஆண்டு விழா

சென்னை லயோலா கல்லூரியில் பொறியியல் துறையின் 9-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பொறியியல் துறையின் 9 ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை பிரான்சிஸ் அருள்பதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தனியார் கார் நிறுவன இயக்குநர் ஸ்ரீராம் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிப்பொறி துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

Exit mobile version