நீலகிரியில் பயன்படுத்தப்படாத 96 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 326 ஆழ்துளை கிணறுகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. இதில் 96 ஆழ்துளை கிணறுகள் பயன்பாடற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி ஆழ்துளை கிணறுகளை மூடி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். பயன்படுத்தாமல் உள்ள 96 ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.