91-வது ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன

91 வது ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று வழங்கப்படுகின்றன. சினிமா துறையில் ஆஸ்கர் விருதுகள் என்பது திரைதுறையினருக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெறுகிறது. தி பிளாக் பேந்தர், ஃபேவரைட், ரோமா உள்ளிட்ட 8 ஹாலிவுட் படங்கள் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

குறும்படம் பட்டியலில்,கோவையை சேர்ந்த தொழில் அதிபர் முருகானந்தம் தொடர்பான பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ் என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றிய ஆவண படமும் போட்டியில் பங்கேற்றுள்ளது.

Exit mobile version