91வது ஆஸ்கர் விருது விழா : விருதுகள் விவரம்…

சினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதினை கிரீன் புக் படம் வென்றது. போஹெமியன் ரப்சோடி திரைப்படம் அதிகப்பட்சமாக நான்கு விருதுகளை கைப்பற்றியுள்ளது.

91வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்றது. தொகுப்பாளர் இன்றி நடைபெற்ற விழாவில் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படத்திற்கான விருதை, பீட்டர் ஃபெரெலி இயக்கிய கிரீன் புக் படம் வென்றது.

சிறந்த திரைப்படமாக ‘கிரீன் புக்’ தேர்வு
சிறந்த இயக்குனர்: அல்ஃபோன்சோ குவாரன் ( ரோமா )
சிறந்த நடிகர்: ரமி மாலெக் ( போஹெமியன் ரப்சோடி )
சிறந்த நடிகை: ஒலிவியா கோல்மேன் ( தி ஃபேவரெட் )
சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங்
சிறந்த துணை நடிகர்: மஹேஷர்லா அலி ( கிரீன் புக் )
சிறந்த அனிமேஷன் படம்: ஸ்பைடர் மேன்
சிறந்த ஆவணப்படம்: ஃப்ரி சோலோ
சிறந்த காட்சி அமைப்பு: ஃபர்ஸ்ட் மேன்
‘போஹெமியன் ரப்சோடி’ திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் : சிறந்த நடிகர், ஒலிதொகுப்பு, ஒலிக்கலவை, படத்தொகுப்புக்கு விருது.

Exit mobile version