தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 91.03 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91 புள்ளி பூஜ்யம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் 91 புள்ளி 3 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளில் 93 புள்ளி 64 சதவீதம் பேரும் மாணவர்களில் 88 புள்ளி 57 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5 புள்ளி 07 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆயிரத்து 697 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 2 ஆயிரத்து 404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல், சிறைவாசிகள் 45 பேர் தேர்வு எழுதிய நிலையில், 34 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் மாணவர்கள் 82 புள்ளி 20 சதவீதமும், மாணவிகள் 92 புள்ளி 84 சதவீதமும் பெற்றுள்ளனர். மொத்தம் 91 புள்ளி 22 சதவீதம் தேர்ச்சி பெறப்பட்டுள்ளது. காரைக்காலில் மாணவர்கள் 72 புள்ளி 24 சதவீதமும், மாணவிகள் 93 புள்ளி 11 சதவீதமும் பெற்றுள்ளனர். மொத்தம் 84 புள்ளி 87 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version