ஈரோட்டில் அமைக்கப்படும் ஊராட்சி கோட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், மத்திய அரசின் அமிருத் திட்டத்தின் மூலம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்திற்கு, 484 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
இந்த நிலையில், வ.உ.சி மைதானத்தின் அருகே நடைபெறும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அக்டோபர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற்று விரைவில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.