கோடைக்காலத்தை சமாளிப்பதற்காக கூடுதலாக 90 இலவச குடிநீர் லாரிகளை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.
கோடைக்காலத்தில் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்கும் விதமாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 90 குடிநீர் லாரிகளை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னையில், ஏற்கனவே 654 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக 90 லாரிகளை இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 550 மில்லியன் லிட்டர் என்றும், அந்த தண்ணீர் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.