தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோய்களை தடுப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விழுப்புரத்தில் டெங்கு நோயை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கரநாராயணன், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 57 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர்களுக்கு தனியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
டெங்கு எவ்வாறு பரவுவது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.