தாய்லாந்தில் ஏராளமான புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில், பாதிக்கு மேல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து விட்டதாக அவற்றை பராமரித்து வந்த விலங்கியல் பூங்கா நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
காஞ்சனாபுரி மாகாணத்துக்கு உட்பட்ட பழமைவாய்ந்த புத்தர் கோவிலில், துறவிகள் சட்டவிரோதமாக புலிகளை வளர்த்து வந்ததாக புகார் கூறப்பட்டதை அடுத்து, அங்கிருந்த 147 புலிகளை காவல்துறையினர் மீட்டனர். இந்த புலிகள் தேசிய விலங்கியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றில் 86 புலிகள் சுவாசக்கோளாறு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புலிகள் அனைத்தும் குறிப்பிட்ட 6 புலிகளின் சந்ததிகள் என்பதால், அவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருந்ததாகவும், இதனால் உயிரிழந்ததாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதனை ஏற்க மறுக்கும் கோவில் புத்த துறவிகள், இந்த புலிகள் அனைத்தும் சிறிய குகைக்குள் அடைக்கப்பட்டதனாலேயே உயிரிழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.