பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
முசாபர் நகரில் கடந்த ஜனவரி மாதம் குழந்தைகளிடம் காணப்பட்ட மூளைக்காய்ச்சல் கடுமையான வெயில் காரணமாக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 11 குழந்தைகள் இந்த நோய்க்கு பலியாகியிருந்தனர். 2 நாட்களுக்கு முன்னர் 41 ஆக இருந்த பலி எண்ணிக்கை, தற்போது 80 ஆக அதிகரித்துள்ளது.
கயா மாவட்டத்திலும் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்யூட் என்சபிலிட்டீஸ், ஜப்பான் என்சபிலிட்டீஸ் என இரண்டு வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 117 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே குழந்தைகள் இறப்புக்கு சர்க்கரை குறைவே காரணம் என பிகார் அரசு தெரிவித்துள்ளது.