“64 செல்போன்களில்” Pokemon Go கேம் விளையாடும் 74 வயது முதியவர்!

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் சென் சான் யோன். இவருக்கு வயது 74 ஆகும். இவர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் இவர் விளையாடும் வீடியோ கேம்தான். சில வருடங்களுக்கு முன்பு அனைத்து தரப்பினராலும் அதிகமாக பேசபட்டும் விளையாடப்பட்டும் வந்த வீடியோ கேம் POKEMON GO ஆகும். இந்த விளையாட்டினை சில நாடுகள் உயிருக்கு ஆபத்தானது என்று தடை செய்தும் இருந்தது. சில நாடுகள் அதனை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. அதனால் சில கிழக்காசிய நாடுகளில் இன்றும் இந்த வீடியோ கேம் விளையாடப்பட்டு வருகிறது.

இந்த விளையாட்டிற்கு நீங்கள் எப்படி பழக்கமானீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு முதலில் ஸ்மார்ட் போனினைப் பயன்படுத்தத் தெரியாது. ஒருமுறை எனது பேரன் என்னைச் சந்திக்க வீட்டிற்கு வந்தபோது அவனை அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். அவன் அப்பொது POKEMON  கேமினை விளையாடுவதைப் பார்த்தேன். போக்கிமான்களை அவன் லாவகமாகவும் எளிதாகவும் பிடிப்பதைப் பார்த்து நானும் அவனுடன் இணைந்து விளையாடினேன். இதனை விளையாடுவதைப் பார்த்த எனது மகன், எனக்கு இந்த விளையாட்டுப் பிடித்திருப்பதை அறிந்து ஸ்மார்ட் போன் ஒன்றினை எனது பிறந்தநாள் பரிசாக அளித்தான். அவனே இதனை டவுன்லோட் செய்வதற்கு உதவினான். முதலில் ஒரே ஒரு போன் மட்டும்தான் வைத்திருந்தேன் அது தற்போது பல போன்களாக பெருகிவிட்டது என்று அவர் கூறினார்.

இந்த முதியவர் ஒரு நாளில் 20 மணி நேரங்கள் விளையாடுகிறாராம். இது ஒரு வாரத்தின் 6 நாட்களுக்கு சமம் ஆகும். மேலும் இந்த விளையாட்டினை விளையாடும் போது சைக்கிள் ஓட்டிகொண்டே விளையாடுகிறார். 64 போன்களையும் சைக்கிளின் முன்பு கட்டிக்கொண்டு விளையாடிய படியே சைக்கிள் ஓட்டுகிறார். அவர் சைக்கிள் ஓட்டுவதற்கு காரணம் இந்த விளையாட்டு மூலம் உடல் உழைப்பு இல்லாமல் போனதால் இந்த துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவர் ஒரே நேரத்தில் தனது உடலிற்கும் மூளைக்கும் உடற்பயிர்சி அளிப்பது ஆச்சரியமாக உள்ளது என்று நெட்டிசனகள் பேசி வருகின்றனர். மேலும் சாலையில் இப்படி செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பும் உண்டு என்று சிலர் கருதுகின்றனர்.

Exit mobile version