ஈரோடு அருகே 2 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்: உறவினர்கள் 7 பேர் கைது

ஈரோடு அருகே தீயில் கருகி இருவர் உயிரிழந்த சம்பவத்தில், 7 பேர் தீ வைத்து கொன்றது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

ஈரோடு மாவட்டம், மல்லன்குழியில் குடிசை வீட்டில் ராஜம்மா மற்றும் அவரது மகள் கீதா தனியாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே அண்மையில் அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில், ராஜம்மாள் மற்றும் அவரது மகள் கீதா இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

விபத்தில் மர்மம் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் ராஜம்மாளின் தந்தை சிக்கு மாதே கவுடா, தாய் சிவமல்லம்மா, அத்தை தொட்ட மாதம்மா, தம்பி லிங்கராஜ் உட்பட 7 பேர் சேர்ந்து சொத்துக்காக இருவரையும் அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொலையை மறைக்க குடிசைக்கு தீ வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version