சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை இருந்து வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன. இந்திய தரப்பிலும் தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது. பதட்டமான சூழ்நிலை காரணமாக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version