7 பேர் விடுதலை விவகாரம் – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

பாதிக்கப்பட்டவர்கள், ”7 பேரின் விடுதலையை” முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசித்து வருவதாகவும், இதில் மத்திய அரசின் குறுக்கீடு இல்லை என்றும் தெரிவித்தார்.

 

Exit mobile version