7 பேர் விடுதலை விவகாரம்! நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம்!

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசுக்கு தயக்கம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Exit mobile version