பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை எதுவும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யலாம் என தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஆளுநர், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கைளில், உள்துறை அமைச்சகத்திற்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலான வழக்கு என்பதால் பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம்அளித்துள்ளது.
Discussion about this post