ராமேஸ்வரம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 690 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரம் அருகே இரு சக்கர வாகனத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் புனித தலத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவதால், டாஸ்மாக் கடை இருக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு, அகற்றியது. இருப்பினும் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் ராமேஸ்வரம் நகர காவல்துறையினர், கந்தமாதனபர்வதம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகனத்தில் 690 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version