65 ஆண்டுகளை கடந்தும் இளமை மாறாத ரோமன் ஹாலிடே! 

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ரோமன் ஹாலிடே வெளியாகி 65 ஆண்டுகள் ஆகிறது.  வில்லியம் வைலர் இயக்கத்தில் கிரிகோரி பெக் மற்றும் ஆட்ரே ஹெப்பர்ன் நடித்த இந்த திரைப்படம் இன்றளவும் மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

1953-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை ஆட்ரே ஹெப்பர்ன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மாளிகைவாசத்தால் மனம் வெறுத்த இளவரசி யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறி இத்தாலியின் ரோம் நகரில் சுற்றித் திரிவது தான் படத்தின் மையக்கரு.

இளவரசி என்று தெரியாமல் முதலில் நட்பாக பழகும் செய்தியாளராக கிரிகோரி பெக் நடித்திருப்பார். இந்த படத்தினை தழுவி உலகின் பல மொழிகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆட்ரே ஹெப்பர்ன் நடிப்புக்கு இணையாக பிற நடிகைகளால் மிளிர முடியவில்லை. கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் காலங்களை கடந்து இன்றளவும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Exit mobile version