பனிச்சறுக்கு விளையாட்டில் 6 வயது சிறுமி சாதனை

ரஷ்யாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி வசிலியா எர்மகோவா, ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் வெப்பநிலையில், பனிச்சறுக்கு விளையாட்டில் தேசிய சாதனை படைத்துள்ளார்.

3 வயதிலிருந்து பயிற்சி எடுத்து வரும் அந்த சிறுமி தலைகீழாக பறந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். உயரமான பனிமலையிலிருந்து மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் கீழிறங்கிய முந்தைய தேசிய சாதனை தகர்த்து ரஷ்ய ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளார். சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Courtesy

Exit mobile version