5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக்: சென்னை- ஹைதராபாத் இன்று மோதல்

5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி, ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று தொடங்க உள்ளது. இந்த தொடரில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், அவதே வாரியர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், உள்ளிட்ட 7 அணிகள் பங்கு பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் தலா 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இதன் முதல் போட்டியில்  சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version