டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 531 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டும் தீவிர கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்த போராட்டத்தின் போது சிஏஏ ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அதிகரித்ததால் வன்முறை வெடித்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வன்முறையில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து கிட்டத்தட்ட ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டும் தீவிர கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கலவரம் தொடர்பாக இதுவரை 531 வழக்குகள் பதியப்பட்டுள்ளாதாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.