சென்னையில் தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பொன்விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், பணியின் போதும், பணி ஓய்வு பெற்றப்பிறகும் உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், அதிக மதிபெண்கள் பெற்ற மின்சார ஊழியர்களின் பிள்ளைகள் 50 பேருக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், அரசு அதிகாரிகள், பணியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வுப் பெற்ற மின்வாரிய ஊழியர்கள் என சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.