மூடப்படும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள்! அதிமுகவின் போராட்டத்துக்கு வெற்றி!

அதிமுகவின் தொடர் அழுத்தங்கள் மற்றும் போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் ஒரே வாரத்தில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுகவால் சொன்னபடி செய்யமுடியவில்லை. பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருந்த வெறும் 96 டாஸ்மாக் கடைகளை மட்டுமே மூடியிருக்கிறது விடியா அரசு… இதுவும் மனசு வந்து மூடவில்லை, பல கட்டப் போராட்டங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சியும்தான் நடந்திருக்கிறது.

தற்போது தமிழகம் முழுவதும் 5ஆயிரத்து 329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதே போல் 3ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் பார்களும் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிக விலைக்கு விற்பதாக மதுப்பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வு….

மதுபானங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, தங்களின் மதுதாகத்தை தீர்த்துக் கொள்ள குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை அருந்திய 22க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிர்ப்பலியானது தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. உயிரைக்குடித்த விஷச் சாராய விற்பனையில் திமுகவினரே ஈடுபட்டதும் அம்பலமானது

திமுக ஆட்சியின் அவலத்தால் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்கள் தொடர்பாகவும், டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதிப்படி டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று போராட்டங்களிலும் ஈடுபட்டனர். டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தில்லாலங்கடித்தனங்கள், திமுகவினரின் டாஸ்மாக் கலெக் ஷன் உள்ளிட்டவையும் அதிமுக நடத்திய போராட்டம் காரணமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டது.

இதன் காரணமாகவே வருமானவரித்துறையும் டாஸ்மாக் அமைச்சரின் சகோதரர் வீடு, உள்ளிட்ட கரூர் கம்பெனியின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு அடிக்க கதிகலங்கிப் போனது திமுக தலைமை.

இத்தனை பேர் உயிரிழப்புக்குப்பிறகு, அதிமுக போராடிய பிறகு இப்போதுதான், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று விடியா அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்தாமலேயே இருந்தனர் ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும்.. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் கட்சியினர் கொடுத்துவந்த தொடர் அழுத்தங்களாலேயே இன்னும் ஒரே வாரத்தில் 500 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version