சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி: 5 தமிழக வீரர்கள் தங்கம் வென்று சாதனை

சர்வதேச அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை, அண்டை நாடான நேபாளத்தில் சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங்கிற்கான சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், தமிழகத்தின் சென்னையை அடுத்த ஆவடியிலிருந்து பங்கேற்ற 5 இளைஞர்கள் தங்கம் வென்று, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

Exit mobile version