"5 லட்சம் பேர் கலந்து கொள்ள போகும் மாபெரும் விழா"

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஓராண்டு சிறப்பாக கொண்டாடப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்து இருந்ததை நினைவு கூர்ந்தார்.

அதன் அடிப்படையில் 31 மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதை துணை முதலமைச்சர் சுட்டிக் காட்டினர்.இந்தநிலையில், சென்னையில் எம்ஜிஆர் நுற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version