நடப்பாண்டுக்குள் 400 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கால்நடைகள் வழங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இதுவரை 5000 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக கூறினார். நடப்பு ஆண்டுக்குள், 400 கோடி ரூபாய் மதிப்பிலான விலையில்லா கால்நடைகளை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.