உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் துவங்கியது.
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் எராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று சிறப்பு பிராத்தனை செய்ததோடு, பங்கு தந்தை பிரபாகர் சாம்பல் பூச 40 நாட்கள் தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.