பொறியியில் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க தொழில்நுட்ப கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் அருள் அரசு தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட புதிய குழு தமிழக உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த குழுவில் 3 அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள் குறித்த புகார்களை இந்தக்குழு நேரில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பும். இதைதொடர்ந்து அந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.