ஆந்திர மாநிலம் நகரி அருகே நடந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஜனா, அனந்தகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர், தங்கள் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு சென்றுள்ளனர். சுவாமி தரிசனம் முடித்து சென்னை திரும்பும்பொழுது, ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள கனமிட்டா பகுதியில், அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பயணம் செய்த ஜனா, ஆனந்தகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேன் ஓட்டுநர், அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் நசுங்கி உயிரிழந்தார். இதில் இரு பெண்கள் பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் நகரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.