உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 4.55 லட்சம் பறிமுதல்

திருச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் 5 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி பகுதியில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையப் பகுதியில் சோதனை நடத்திய போது இருசக்கரவாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version