4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி – இன்று அறிவிப்பு

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது. இதேபோன்று, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகின்றன.

தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளார். இவற்றுடன் சேர்த்து திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல ஆணை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version