பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் – சரத் பவார் மத்திய அரசுக்கு கோரிக்கை

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு அனைத்து கட்சியினரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

அனைத்து கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து மகளிர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய சரத் பவார், 50 சதவீதம் கொடுக்க முடியாவிட்டாலும் 33 சதவீதமாவது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் நிர்வாக ரீதியிலும் பெண்கள் அதிகளவில் பணியாற்ற ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Exit mobile version