3% இடஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கான வரப்பிரசாதம்

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், மூன்று சதவிகித இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில், விளையாட்டு வீரர்களுக்கான அங்கீகாரம் ஒருபோதும் மறுக்கப்பட்டது கிடையாது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ரொக்கப் பரிசுகள், கல்வியில் முன்னுரிமை என பல வசதிகள் தமிழக அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது.

இருப்பினும், வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் தமிழக அரசுப் பணிகளில் காவல் துறையைத் தவிர வேறு எந்த துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இதனால், பெரும்பாலான தமிழக விளையாட்டு வீரர்கள் தங்களின் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசுப் பணி, ரயில்வே, ராணுவம், வங்கிகள் போன்றவற்றை மட்டுமே நம்பி இருக்க நேர்ந்தது. வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்ற அவர்களின் நிறைவேறா கனவை தமிழக அரசு சாத்தியப்படுத்தியிருக்கிறது.

3 சதவிகித இடஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கான வரப்பிரசாதம். இதன்மூலம், மத்திய பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே வேலைவாய்ப்பில் நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. விளையாட்டு துறையிலும் அசூர வளர்ச்சி ஏற்படும்.

அரசு பள்ளி, கல்லூரி பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர இடஒதுக்கீடு அறிவிப்பு முக்கிய பங்காற்றும் என்பதில் நிச்சயம் அய்யமில்லை…

Exit mobile version