செல்போன் கடையில் கொள்ளை: 3 பேர் கைது

சென்னை ஐசிஎப் பகுதியில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐசிஎப் பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி, முஸ்தபாவின் கடையின் ஷட்டரை உடைத்த 3 பேர் கொண்ட கும்பல், கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், கடையில் உள்ள 4 சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட, மதன், சுகுமார், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விமல் என்பவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version