3 முறை பிரதமர்! மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க 12 மணி நேரம் மட்டுமே அனுமதி !

சரித்திர சாதனை நிகழ்த்திய சில தலைவர்களின் இறுதி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை.  இதை பல சந்தர்ப்பங்களில் வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது.  அந்த பட்டியலில் நவாஸ் சரீப்பும் இடம் பிடித்து விட்டது தான் சோகம்.

இந்தியாவின் எதிரி நாடாக பாகிஸ்தான் பார்க்கப்பட்டாலும் நவாஸ் சரீப் இந்தியாவை நண்பனாகவே மதித்து வந்தார். இதுவே அவருக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியது. 

 முரண்பாடுகள், மாற்றுச் சிந்தனைகள் என முதிர்ச்சியற்ற தன்மையின் மொத்த உருவான பாகிஸ்தானை ஆட்சி செய்வதும், அரியணையில் ஏறுவதும் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் 3 முறை பாகிஸ்தான் பிரதமர் இருக்கையை கைப்பற்றி தனது ஆளுமையை நிரூபித்தவர் தான் நவாஸ் சரீப்.

மாற்றம் ஒன்றே மாறாதது. வெற்றி பெற்றவர் தோல்வியடைவதும், தோல்வியடைந்தவர் வெற்றி பெறுவதும் உலக நியதி. இந்த நிலையில் தான் தனது மனைவியின் கடைசி நிமிடங்களில் கூட அவருடன் இருக்க முடியாமல் சிறையில் அவதிப்பட்டு வந்தார் நவாஸ் சரீப்.

மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பரோல் கேட்ட நவாசுக்கு 12 மணி நேரம் மட்டுமே ஒதுக்கியுள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம். மனைவியின் இழப்பு ஒரு பக்கம், சிறை கொடுமைகள் மறுபக்கம் என சோதனைகள் ஒரே நேரத்தில் நவாசை சூழ்ந்துள்ளன. 

Exit mobile version