3 நாளில் 400 கோடி வசூல் – சாதனை படைத்த பிரிடேட்டர் திரைப்படம்

ஹாலிவுட் திரைப்படமான தி பிரிடேட்டர் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே 14ம் தேதி தி ப்ரிடேட்டர் படம் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான மூன்று நாட்களிலேயே வட அமெரிக்காவில் மட்டும் 24 மில்லியன் டாலரை வசூலாக குவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 55 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 400 கோடி ரூபாயாகும். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது. 

அதிபயங்கர பலத்துடன் வேற்று கிரகத்திலிருந்து வரும் மிருகத்தை அழிப்பது தான் படத்தின் கதையாகும். தி ப்ரிடேட்டர் படத்தில் பிரபல நடிகர்களான ஒலிவியா முன், ஸ்டெர்லிங் கே.பிரவுன், போய்ட் ஹால்ப்ரூக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அர்னால்ட் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version