இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது டி20 போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களுருவில் இன்று நடக்க உள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் கடைசி பந்தில்  ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களுரூவில் இன்று நடைபெற உள்ளது. தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா வீரர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

Exit mobile version