புவனகிரியில் உள்ள துணை மின்நிலையத்தில் இரண்டாவது புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தின் மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தடையில்லாமல் மின்சார வசதியை பெற்று வருகின்றன.
இந்த நிலைய கட்டிடத்தின் மேல்மாடியில் சூரியஒளி மின்தகடு மூலமும் மின் உற்பத்தி செய்து பொது விநியோகத்திற்கு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த துணை மின்நிலையத்தில் இரண்டாவது மின்மாற்றி பொறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் மின்சாரம் பெறும் 40க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு தடையில்லாத, ஏற்றத்தாழ்வு இல்லாத, சீரான மின்சாரம் அளிக்க முடியும்.
53 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு சிறப்புத் திட்டத்தின்படி இரண்டாவது புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் பகுதியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால், தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.