உதகையில் மண், நீர்வள முகமை சார்பில் 28-வது தேசிய கருத்தரங்கு

உதகையில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 28-வது தேசிய கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் காலம் தவறி பெய்யும் மழை விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் இதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். நீர் வளங்களை நிர்வகிப்பதில் காலநிலையானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறினார்.

முன்னதாக சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version