26 வயதில் 17 கிலோ எடை மட்டுமே – உயிருக்கு போராடும் மாடல் அழகி

ரஷ்யாவில் டயட் காரணமாக , 17 கிலோ எடை மட்டுமே இருக்கும் மாடல் அழகி உயிருக்கு போராடி வருகிறார்.

பொண்ணுங்களை பொருத்த மட்டில் ,எல்லா நாட்டு பொண்ணுங்களும் ஸ்லிம்மாக தோற்றமளிக்கவே விரும்புகின்றனர். நம்ம ஊரு பொண்ணுங்க , ஒல்லியா இருக்க ஆசைப்பட்டு சாப்பிடாம இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சீரோ சைஸ் வராதா என ஏக்கப்படும் இளம் பெண்கள் இங்கே ஏராளம். ஆனால் இந்த சீரோ சைஸ் எவ்வளவு ஆபத்தானது என யாரும் உணர்வதில்லை. உடலுக்கு தேவையான உணவு கிடைக்காமல் மெலிந்து போகும் பெண்கள் பின்னாளில் பெரிய விலைகொடுக்க வேண்டியிருக்கும்.

அதிலும் நம்ம ஊரு பொண்ணுங்க , கல்யாணம் வரை ஒல்லியா இருப்பதும் கல்யாணத்துக்கு பிறகு குண்டாவதும் இந்த சீரோ சைஸ் ஆசையினாலதான்.

ரஷ்யாவில் மாடல் அழகி ஒருவர் சீரோ சைஸ்க்கு ஆசைப்பட்டார். ஆனால அவர் இப்போது பேய் மாதிரி இருப்பதாக பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யாவின் பர்னவுல் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கரியாகினா. தற்போது 26 வயதாகும் இவர் தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே சரியாக சாப்பிடுது இல்லை. அதற்கு பதிலாக வாழைப்பழம், ஆப்பிள், தண்ணீர் மற்றும் ஜுஸ் போன்றவைகளையே குடித்து வந்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல கிறிஸ்டினாவின் உடல் கடுமையாக மெலிந்து விட்டது. தற்போது அவரது எடை வெறும் 17 கிலோதான். பார்ப்பதற்கு மிகவும் கோரமாக இருக்கும் அவரது புகைப்படத்தை 5 லட்சத்து இருபதாயிரம் பேர் பகிர்ந்துள்ளனர் .

இப்போது கிறிஸ்டினா கண்முன்னே சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிடமுடியாது. இறக்கும் தருவாயில் கூட கண்முன்னே சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கிறிஸ்டினா பார்ப்பதற்கு உயிருள்ள பிணம் போன்று இருக்கிறார். அவர் பேய் படங்களில் நடிக்கலாம், அவரின் தோற்றம் அப்படித் தான் இருக்கிறது என்று கிண்டலாக கூறியுள்ளார். இதற்கும் மீறி அவர் சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், ஒரு ஆண்டுக்கு மேல் உயிரோடு இருப்பதே கடினம் என்று கூறியுள்ளார்.

Exit mobile version