கிருஷ்ணகிரியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் நீர்தேக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிறு குன்றில், பாறை ஓவியங்களை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்தனர். இந்த பாறை ஓவியங்கள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்ததாக இருக்கும் என கூறும் வரலாற்று ஆய்வாளர்கள், இந்த ஓவியங்களில் இரண்டு உஜ்ஜெய்னி குறியீடுகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த குறியீடுகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வணிகர்களின் காசுகளில் பதிக்கப்பட்டுள்ள குறியீடுகள் ஆகும். மற்றொரு ஓவியம் நான்கு புறமும் நடனமாடும் மனிதர்களும், நடுவில் ஈமப்பேழை இருப்பது போன்றும் உள்ளது.