கிருஷ்ணகிரியில் 2500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரியில், 2500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு இணைந்து, தொல்லியல் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திப்பனபள்ளி அருகே உள்ள சஜ்ஜலபள்ளியில் நெடுநாட்களாக இருந்த நடுகல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 அடி உயரமும் 4 அடி சுற்றளவும் கொண்ட இந்த நடுகல், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று தொல்லியல் துறை கணித்துள்ளது.

இதேபோல, வித்தியாசமான உருவ அமைப்புடன் கூடிய புலிகுத்திப்பட்டான் என்ற கல்லும் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை குறித்து தாசரப்பள்ளி மாணவர்களுக்கு அருங்காட்சியக காப்பாளர் விளக்கமளித்தார்.

Exit mobile version