நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும் 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தை 12 ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தி, 25 சதவிகித இடஒதுக்கீடாக உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.