சென்னை ஆவடி அருகே மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த 24 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆவடி அருகே மின்சார ரயிலின் பெட்டி ஒன்றில் மூன்று பார்சல்களில் 24 கிலோ கஞ்சா கேட்பாரற்று கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஆவடி ரயில் நிலைய போலீசார், அதைக் கைப்பற்றினர். கஞ்சாவை யார் கொண்டு வந்தனர், எங்கிருந்து கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை வியாசார்பாடி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.