போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அங்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் கோடை காலத்தில் வறட்சி ஏற்படும் எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.