200 ஜாக்கிகள்; 20 தொழிலாளர்கள்; அலேக்காக உயர்த்தப்பட்ட மாடி வீடு

வேலூரில் பள்ளத்தில் இருந்த மாடி வீடு, 200 ஜாக்கிகள் கொண்டு 4 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த கஜேந்திர மன்னன் என்பவரது வீட்டின் தரைத்தளம், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலையைவிட கீழே இருந்துள்ளது. இதனால், கால்வாயில் வரும் கழிவு நீர், கஜேந்திர மன்னனின் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அவதியடைந்த அவர், வீட்டை இடிப்பதற்கு மனம் இல்லாமல், நண்பர்களின் யோசனைப்படி, தரை மட்டத்தை உயர்த்தும் முடிவுக்கு வந்தார்.

சென்னையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தை தொடர்பு கொண்டதை அடுத்து, 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 200 ஜாக்கிகள் உதவியுடன், வீட்டை இடிக்காமலேயே 4 அடிக்கு உயர்த்தியுள்ளார். உயர்த்தப்பட்ட வீட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Exit mobile version