20 அடி நீள விநாயகர் மணல் சிற்பம் – சுதர்சன் பட்நாயக் வாழ்த்து

பிரபல மணல் கலைஞரான சுதர்சன் பட்நாயக் விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 அடி நீள மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில் இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். படுத்த நிலையில் உள்ள இந்த விநாயகர் சிலையை உருவாக்க சுதர்சன் பட்நாயக் 15 ஆயிரம் கிலோ மண்ணை பயன்படுத்தியுள்ளார்.

இந்த மணல் சிற்பத்தின் மீது உலக வெப்பமயமாதல் குறித்த செய்தி ஒன்றையும் எழுதியுள்ளார். “பசுமையை நோக்கி பயணிப்போம், பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்” என்ற வாசகங்களை சிற்பத்தில் பதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, “நாம் இந்த புவியில் வாழ்கிறோம், உலக வெப்பமயமாதல் என்ற சுற்றுச்சூழல் பேரழிவின் வாசலில் நாம் நிற்கிறோம். சரியான நடவடிக்கை எடுக்கத் தவறினால் விரைவில் ஆபத்தில் சிக்கி கொள்வோம்” என குறிப்பிட்டார்.

இந்த சிற்பத்தை புரி கடற்கரை வரும் சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்துச் செல்கின்றனர்.

Exit mobile version