20 அடி பள்ளத்தில் விழுந்த பசு!

சென்னையில் செல்போன் டவருக்காக தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சினைப் பசு, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில் செல்போன் டவர் அமைப்பதற்காக 20 அடி பள்ளம் தோண்டப்பட்டது. இதில் அந்த வழியாக வந்த சினைப்பசு ஒன்று தவறி விழுந்தது.

பள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல் பசு தவிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் பசுவை மீட்க முயன்றனர்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version